ads

Tuesday, 13 May 2014

ராஜாவின் வாதங்கள் ஒரு மைல்கல்

தன்..வாழ்நாளில் ..தந்தி ..டி.வி....செய்த ஒரே நல்ல காரியம்!ராஜா...வின்...பேட்டியை ...2 ..முறை ஒளி..பரப்பியதுதான்! 

நீதிமுறைவரலாற்றில் ராஜாவின் வாதங்கள் ஒருமைல்கல்! விளக்கங்கள் ..அற்புதம்!..அருமை!..அபாரம்!....காரணம்...

1. இந்திய அரசுயந்திரத்தின்..கோரமான அரசியல் காழ்ப்பு!
2. இயற்கை நீதிக்கு..எதிரான ஆதிக்கம்!...வழிமுறை!
3. கேடு கெட்ட...'மீடியா'..க்களின்...கேப்மாரித்தனம்!
4. பாராளுமன்ற கூட்டுக்குழுவின்..முறைகேடான நீதியற்ற 
நியாயமற்ற ..அயோக்கியத்தனமான.. அணுகுமுறை! 

இப்படி ..இந்தியா கண்டிராத..ஒரு..அபாண்டத்தை துணிந்தே நடத்திய..நயவஞ்சகத்தை....ஒருவர்..தனது வலிமையான  வாதத்தினால்.. வார்த்தைகளால்...தகர்த்தது.. என்பது ஈர செருப்பால்.. எதிரிகளை ..அடித்தது ..போல் இருந்தது! ராஜா..ஓர் கருப்புச்சட்டை என்பதில் கர்வம் கொள்கிறோம்!

Saturday, 12 April 2014

தலித் மக்களின் புரட்சி

1785 பறையர் புரட்சி : 1785 இல் பறையர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜாதி தமிழர்களை எதிர்த்து மாவீரர் பெரிய தம்பி பறையர் தலைமையில் கிளர்ந்து எழுந்தார்கள். பெரிய தம்பிபறையர் பெரிய பர சேரியில் வாழ்ந்தார் பறையர்களின் தலைவராக இருந்தார் என்று வெள்ளையர்கள் தங்களது குறிப்பேடுகளில் அவரை பற்றியும் அவர் தலைமையில் நடந்த கிளர்ச்சியையும் எழுதியுள்ளனர். அன்றைய கால கட்டத்தில் சென்னை மாநகர் "பெரிய பர சேரி" (தி கிரேட் பர சேரி) என்று அழைக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். பறையர்களின் எழுச்சியையும் போரரட்டத்தையும் அறியாமல் ராமசாமி வந்து விடுதலை வாங்கி கொடுத்தார் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம், 1995 இல் நாங்க புரட்சி பண்ணோம் அதனாலதான் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறீர்கள் என்று சொல்லும் ஆண்ட பரம்பரைகளிடமும். தமிழ் தேசியம் பேசும் தறுதலைகளிடமும் நமது எழுச்சி வரலாற்றை எடுத்து சொல்லுங்கள். எங்கள் போராட்ட வரலாறு என்பது ஆயிரம் ஆண்டுகால வரலாறு என்று. முழு விவரங்களுக்கு : The 1785 “Paraiyar Insurrection” by Irchi."

Monday, 10 March 2014

டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் (27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை


1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் “வைசிராய் நிர்வாகக் குழு’வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்தஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்.