ads

Sunday, 15 April 2018

சத்தியவாணி முத்து அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் 1949 துவங்கப்பட்டபோதே அதன் பிரமுகராக இருந்தவர். அவர் பறையர் சமூகத்தில் பிறந்தவர்

"தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்" நிறுவனர் போற்றளுக்குரிய தலைவர் #சத்தியவாணி_முத்து அம்மையாரின்
95-வது பிறந்தநாள் இன்று.
-------------------------------------------------------------------------
ஊழல் குற்றவாளிகளென அறியப்படுவோர்களே, திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களாக இன்றையச் சூழலில் அறியப்படுகிறார்கள்.
பெருமைக்குரிய, மக்களின் நலனுக்கான அறிவையும் உழைப்பையும் அளித்துள்ள பலரையும் இன்றைய தலைமுறைக்கு, திராவிட அரசியல் கட்சிகளே அறியப்படுத்தவில்லை. அப்படி அவர்கள் மறைக்கப்படுவதற்கு சாதியும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதியின் காரணமாக மறக்கடிக்கப்படுபவர்களில் அம்மா சத்தியவாணி முத்து அவர்களும் ஒருவர்.
சத்தியவாணி முத்து அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் 1949 துவங்கப்பட்டபோதே அதன் பிரமுகராக இருந்தவர். அவர் பறையர் சமூகத்தில் பிறந்தவர் என்பதாலும் பட்டியலின சமூகத்தின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை விதைத்தவர் என்பதாலும் திமுகவின் தலித் சமூக பிரதிநிதியாகவே கருதப்பட்டவர்.மேலும், அவரும் கருணாநிதி அவர்களும் திமுகவின் ஐம்பெருந்தலைவர்களுக்கும் அடுத்தக் கட்டத் தலைவர்களாக இருந்தவர்களாவார்கள்.
1953 இல் ராஜகோபாலச்சாரி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி சிறை சென்ற சத்யவாணி முத்து அம்மா அவர்கள், திமுக முதன் முதலில் 1957 இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, அதன் பெரம்பூர் தொகுதி வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார். 1959 இல் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு, திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
1967 ஆம் ஆண்டிலும் 1971 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டதோடு அல்லாமல், அண்ணாதுரை அவர்களின் தலையிலான அமைச்சரவையில்(1967-69) 'அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை' அமைச்சராகவும், அண்ணாதுரை அவர்களின் மறைவுக்குப் பிறகு( 1969-74)அமைந்த, கருணாநிதி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் 'அரிஜன நலத்துறை' அமைச்சராகவும் பதவி வகித்துக் கடமையாற்றினார்.
திமுகவில் தலித்துகள் தொடர்பான அணுகுமுறைகளில், பாரபட்சம் இருந்ததை எதிர்த்து உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி அவர்கள், உட்கட்சியில் நிலவும் சாதியப் போக்கை கட்டுப்படுத்தத் தவறிய பட்சத்தில், சத்தியவாணி முத்து அவர்கள், 1974 இல் திமுகவிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில், "முடிவில்லாமல், அவர்கள் நம்மை சுரண்டுவதையும், அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது" என்கிற முழக்கத்தோடே, 'தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்னும் தனிக்கட்சியை தலைமையேற்றுத் துவக்கினார்.
"டாக்டர்.அம்பேத்கருக்குப் பிறகு, இந்த சமூகத்திற்காக முழுமனதோடு யாரும் உழைக்கவில்லை" என்கிற வேதனையை வெளிப்படுத்திய அவரின் தலைமையில், தலித்துகளும் திரண்டனர். 1977 இல் திமுகவிலிருந்து விலகிச் சென்ற, க.நெடுஞ்செழியன், கே.ராஜாராம், பி.யூ.சண்முகம், எஸ்.மாதவன் உள்ளிட்டோர் உருவாக்கிய 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' கட்சியும், சத்தியவாணி முத்து அவர்களின் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கட்சியும் இணைந்து சிலகாலம் செயல்பட்டன. இந்நிலையில் 1977 இல் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்தது எம்.ஜி.ஆரின் அதிமுக. அதே ஆண்டில், அதிமுகவோடு இணக்கமான சத்தியவாணி முத்து அவர்கள், தமது கட்சியை அதிமுவுடன் இணைத்தார்.
அதிமுக சார்பில், 1978 இல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சத்தியவாணி முத்து அவர்கள், 1979 இல் சரண்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். முதல் முதலாக திராவிட இயக்கத்திலிருந்து மத்திய அமைச்சரானவர் சத்தியவாணி முத்து அவர்கள்தான்.
அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும், புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும், வஞ்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, ஒரு பெண் நின்றுகாட்டுவது அவ்வளவு எளியதானதல்ல. குறிப்பாக தலித் பெண்மணிக்கு அது எளியதே அல்ல. ஆனால், சத்தியவாணி முத்து அவர்கள் நின்றார். சமூகமும் அவருக்குத் துணையாக நின்றது. சமூக மாற்றம் குறித்து அவர் கண்ட கனவு இன்னமும் மெய்ப்படவில்லைதான். ஆனால், அவரைப் போன்றவர்களால்தான் அந்தக் கனவு நம்மிடமும் வந்து சேர்ந்துள்ளது.
1999 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் நாளில், இயற்கையடைந்துவிட்ட, நம் போற்றுதலுக்குரிய தலைவர், அம்மா சத்தியவாணி முத்து அவர்களின் 95 ஆவது பிறந்த நாள் இன்று (2018-பிப்15).
ஸ்டாலின் தி

சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற பிரெஞ்சு படையுடன் போரிட்ட#தலித்துகள்:- 1818 ல் பீமா நதிக்கரையில் மஹர்கள் எப்படி வீரஞ்செறிந்த போரில் பங்கேற்றார்களோ, போரை நடத்தி வென்றார்களோ அப்படி ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டு தலித் சமூகத்தவருக்கும் உண்டு.


    சென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற பிரெஞ்சு படையுடன் போரிட்ட#தலித்துகள்:-
    1818 ல் பீமா நதிக்கரையில் மஹர்கள் எப்படி வீரஞ்செறிந்த போரில் பங்கேற்றார்களோ, போரை நடத்தி வென்றார்களோ அப்படி ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டு தலித் சமூகத்தவருக்கும் உண்டு.
    1758 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையால் சென்னைபல மாதங்கள் முற்றுகையிட்டும் சென்னையை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் துருப்புகளுக்குப் பறையர் சமூகத்தினர் உதவியாக இருந்ததுதான்.
    18 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கப் போட்டியில் பிரிட்டிஷ் படைகளும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டன. 1756 ல் ஆரம்பித்து 1763 வரை ஏழு ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் போர்கள் நடந்தன. அதில் சென்னையைக் கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் பெற்ற வெற்றியின் மூலம்தான் பிரெஞ்சு காலனி ஆதிக்க முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பிரிட்டிஷ் மேலாதிக்கம் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டது.
    ஜெனரல் #லாலி தலைமையில் கடலூரிலிருந்த செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்றியபின் 1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. அதைக் கண்டதும் சென்னையிலிருந்த பெரும்பாலோர் ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு ஊர்களுக்குப் போய்விட்டனர்.
    செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுப் படை முற்றுகையிட்ட நிலையில் போதுமான துருப்புகள் இல்லாமல் கல்கத்தாவிலிருந்து வரவேண்டிய கப்பல்படையின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளபதி ஜெனரல் #பிகோட் என்பவர் தனது துபாஷியான ரஞ்சேஸ்ரீ#முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரை அழைத்துக்கொண்டு பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட தலித் குடியிருப்புக்கு வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பாதுகாக்க உதவுமாறு அங்கிருந்த பறையர் சமூகத்துத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
    சண்டையிட்டவர்களுக்கு ஒரு ஜோடி உடை மட்டுமே:-
    அதனடிப்படையில் இரண்டாயிரம் தலித் ஆண்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த பிரிட்டிஷ் துருப்புகளோடு சேர்ந்து சென்னையைக் காக்கப் போரிட்டனர். தொடர்ச்சியாகப் பீரங்கித் தாக்குதல் நடத்தியும் பிரெஞ்சுப் படையால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்கவோ சென்னையைக் கைப்பற்றவோ முடியவில்லை.
    எனவே 1759 பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அது தோற்றுப் பின்வாங்கிச் சென்றது. சுமார் மூன்று மாத காலம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் காத்து நின்று பிரெஞ்சுப் படையைத் தோற்றோடச்செய்த போரில் நூற்றுக்கணக்கான தலித்துகள் வீர மரணம் அடைந்தனர். அப்படி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிலமும், உதவித் தொகையும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஜோடி உடை மட்டுமே அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
    1810 ஆம் ஆண்டு பிளாக் டவுனில் குடியிருந்த தலித்துகள், ஐரோப்பியர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வரி விதித்தது. தமது முன்னோர்கள் சென்னையைக் காப்பாற்றுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெறுவதற்கும் செய்த உதவியை சுட்டிக்காட்டி அந்த வரியை நீக்குமாறு #மலையப்பன்#மதுரவாசம்,#கூத்தன்#குட்டியப்பன் உள்ளிட்ட தலித் சமூகப் பெரியவர்கள் 44 பேர் கையொப்பமிட்டு பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளித்தனர்.
    அந்த கோரிக்கையைப் பரிசீலித்த பிரிட்டிஷ் காலனிய அரசு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு வரி விலக்களித்து 1810 மார்ச் 27 ஆம் நாள் ஆணை பிறப்பித்தது.
    பீமா கோரேகான் யுத்தத்துக்கும் சென்னையைக் காப்பாற்றுவதற்கு நடந்த போருக்கும் முக்கியமான இரு வேறுபாடுகள் உள்ளன.
    கோரேகானில் இந்தியாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் படையை பிரிட்டிஷ் காலனிய படையோடு சேர்ந்து மஹர்கள் தோற்கடித்தனர். ஆனால் சென்னையிலோ பிரெஞ்சு காலனிய படையை எதிர்த்தே பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து பறையர் சமூகத்தினர் போரிட்டனர். அங்கு பிரிட்டிஷ் படை நடத்தியது ஆக்கிரமிப்புக்கான யுத்தம். ஆனால் இங்கு நடந்ததோ சென்னையைக் காப்பதற்கான தற்காப்பு யுத்தம்.
    நினைவுகூரவோ பெருமைகொள்ளவோ தவறிவிட்டனர்
    பீமா கோரேகான் யுத்தம் நடப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே வீரம் செறிந்த போரை நடத்தி பிரெஞ்சுப் படையிடமிருந்து சென்னையைக் காத்த வரலாறு தமிழ்நாட்டுப் பறையர் சமூகத்தினருக்கு இருந்தும் அதை மகாராஷ்டிர மாநில மஹர்களைப்போல இங்கே நினைவுகூரவோ பெருமைகொள்ளவோ அவர்கள் தவறிவிட்டனர். பீமா கோரேகானின் வீர நினைவுகளை 1927 ஆம் ஆண்டு டாக்டர்.#அம்பேத்கர் மீட்டெடுத்ததைப் போலத்தான் 1758 ஆம் ஆண்டு யுத்தம் குறித்த செய்திகளடங்கிய ஆவணங்களைக் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆவணங்களிலிருந்து கண்டெடுத்து சென்னையின் மேயராயிருந்த தலித் தலைவர்#சிவஷண்முகம் பிள்ளை அச்சிட்டு வெளிக்கொண்டுவந்தார்.
    ஆனாலும் பீமா கோரேகான் போர் நினைவுச் சின்னத்தையொட்டி ஆண்டுதோறும் மகராஷ்டிர தலித்துகள் லட்சக் கணக்கில் கூடுவதைப்போல இங்கே பிளாக் டவுன் என முன்னர் அறியப்பட்ட பகுதியிலோ அல்லது தமது முன்னோரால் காப்பாற்றப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலோ ஆண்டுதோறும் தமிழ்நாட்டு தலித்துகள் கூடவோ தமது வரலாற்றை நினைவுகூரவோ இல்லை. மையநீரோட்ட வரலாறு அவர்களின் போராட்டங்கள் குறித்த பதிவுகளைப் புறக்கணித்ததும் அதற்கொரு காரணம்.
    தலித் மக்களுக்கென்று வரலாறோ பண்பாடோ இல்லை; அவர்கள் எப்போதும் கல்வியறிவற்ற, நிலமற்ற கூலி அடிமைகளாகத்தான் இருந்துள்ளனர் என்பதுதான் சாதியவாதிகள் தமக்குள் தீட்டி வைத்திருக்கும் சித்திரம். அதையேதான் மைய நீரோட்ட வரலாறுகளும் மறு உறுதி செய்துள்ளன.
    #யூஜின்இர்ஷிக்#டேவிட்வாஷ்புரூக் போன்ற ஒருசில அயல்நாட்டு வரலாற்றாசிரியர்களின் நூல்களில் மட்டும்தான் தலித் மக்களின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறு பதிவாகியுள்ளது.
    தலித் மக்கள் கல்வி பெறுவதையும், பதவிகளுக்கு வருவதையும், அவர்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவதையும்கூட சாதிய மனம் சகித்துக்கொள்ளும். ஆனால் தலித் மக்களுக்கு வீரஞ் செறிந்த வரலாறு ஒன்று இருக்கிறது என்பதை அதனால் ஏற்கவே முடியாது. அதைத்தான் பீமா கோரேகானில் நடந்த தாக்குதல் காட்டுகிறது. சென்னையைப் பிடிக்க முடியாமல் பிரெஞ்சுப் படை தோற்றுப் பின் வாங்கிய நிகழ்வின் 260 ஆம் ஆண்டு இன்று பிப்ரவரி 16 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. பீமா கோரேகான் போராட்டத்திலிருந்து தமிழ்நாட்டு தலித் மக்கள் உத்வேகம் பெற்றிருந்தால் பிப்ரவரி 16 ஆம் நாளை அவர்கள் நினைவுகூரக்கூடும்.
    புறக்கணிக்கப்பட்ட வரலாறு திருத்தி எழுதப்பட அதுவே துவக்கமாகவும் அமைந்துவிடக்கூடும்..
    -முனைவர்
    Ravi Kumar

    Comments

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலயத்தில் உள்ள காவற்ப்பறையன் என்ற பறையரைப்பற்றிய தகவல்கள்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலயத்தில் உள்ள காவற்ப்பறையன் என்ற பறையரைப்பற்றிய தகவல்கள் சேர்க்க வேண்டுகின்றேன். இந்த ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அது காடாக(புன்செய் நிலமாக) இருந்ததாகவும் அந்த நிலத்தை காப்பாற்றியவன் காவல் பறையன் என்றும். புற்று ஒன்றை வெட்ட எத்தனித்த வேளையில் அதில் இருந்து பாம்பும் லிங்கமும் வந்ததாகவும் அதைத்தொடர்ந்து மணலூர் அரசன் உக்கிரபாண்டியன் அங்கு ஆலயம் எழுப்பியதாகவும் வேங்கடம் முதல் குமரி வரை எனும் நூலில் பக்கம் 176-ல் எழுதப்பட்டுள்ளது.
ஆக இந்த வரலாற்று தகவல் மூலம் பறையர்கள் மருதநிலத்திற்க்கு முன்பே புன் செய் நிலங்களை கட்டிக்காத்தவர்கள் விவசாயக்குடிகள் என்பதை உணர முடியும்.

தலித் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி – 9,945 பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.

நிரப்பப்படாத 10,000 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் தலித் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி – 9,945 பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. ‘தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம்' இது குறித்து தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஒன்பது மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு, தலித் மக்களுக்கான நிரப்பப்படாத இடங்களை இந்த ஆண்டு சூன் 30ஆம் நாளுக்குள் சிறப்பு நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆனால், எந்த அரசுத் துறையோ நிறுவனமோ இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு கடுகளவு அக்கறையும் காட்டவில்லை.
– ராதா வெங்கடேசன், ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்'

எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 27614 பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
5 March
வழக்கு தொடரப்பட்டு அந்த தீர்ப்பில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியும் இன்று வரை அப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 27614 பணியிடங்களை நிரப்ப வேண்டும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விளையாட்டு துறையில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு அரசு பணிகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி அவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், உயர் கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த சிறப்பு உதவித்தொகை ரூ 85 ஆயிரத்தில் இருந்து தற்போது தமிழக அரசு மூலம் ரூ 50 ஆயிரமாக குறைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்.
மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க விரைவில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், அரசு பணிகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் கமிட்டி நியமித்துள்ளது, இதனால் கீழ்நிலை பணியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வகிக்கும் பதவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த கமிட்டி கீழ்நிலை பதவியில் உள்ள பணியிடங்களை
காலி செய்ய வேண்டாம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.... தமிழ்நாடு தலித் உரிமைகள்பாதுகாப்பு இயக்கம்
என்றும் மக்களுக்காக மக்களோடு மக்களாய் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்....

நண்பரின் #பதிவு:

நான் வயிற்றுக்கு சோறு மட்டுமே திங்கிற தாழ்த்தபட்டவன் என்பதால்,இதை பதிவிடுவது எனது கடமை ஆகிறது...
"தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது.
உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்"
– என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
#பெரியார் ஈவெரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரது வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட செய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.
(1924 இல் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் என்பது பெரியாரின் போராட்டம் அல்ல .அது காங்கிரஸ்-காந்தி நடத்திய போராட்டம்.
அதில் கலந்துகொண்டார் என்பதை தாழ்த்தப்பட்டோருக்காக போராடினார் என்று மிகைப் படுத்தினார்கள் .
மேலும் வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டம் அல்ல.ஈழவர்-சானார்-புலையர் இடையிலான போராட்டம்....
அப்படி அவர் தலைமையேற்று போராட்டம் நடத்தியது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் வைக்கம் போன்ற ஒரு போராட்டம் நடத்தவில்லை?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் ஏன் தமிழ்நாட்டில் ஒரு போராட்டமும் நடத்தவில்லை?.....என்ற உண்மையை சிந்தித்துப்பாருங்கள் நண்பர்களே! .
..(இதே கேள்வியை தந்திடிவி பேட்டியில் வீரமணியிடம் பாண்டே கேட்டபோது அவரால் சரியான பதில் சொல்ல இயலவில்லை என்பதை பேட்டியை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். )..
.நண்பர்களே! உண்மையான வரலாறு சொல்வது என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன .அவர்களில் சிலர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
(இவர்கள் பெரியாரின் திராவிடர் கழகத்தினரால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட தலைவர்கள்.தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்த "தலித்"தலைவர்கள்)
1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
3. எம்.சி.ராஜா (1883-1945)
4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
10.ம.பழனிச்சாமி (1870-1941)
11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
12.ஆர்.வீரையன் (1886-1938)
13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
20.ஆர்.ஸ்ரீனிவாசன் பிள்ளை(1924)
21. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாதது
.
– இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள்.
இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
சூரியோதயம் (1869)
பஞ்சமன் (1871)
சுகிர்தவசனி (1877)
திராவிடமித்திரன் (1885)
திராவிட பாண்டியன் (1885)
பூலோக வியாசன் (1900)
தமிழன் (1907)
ஆதிதிராவிட மித்திரன் (1907)
ஆன்றோர்மித்திரன் (1910)
மகாவிகட தூதன் (1886)
பறையன் (1893)
விகடதூதன் (1897)
இல்லற ஒழுக்கம் (1899)
மதராஸ் டெம்ப்ரன்ஸ்
ஹெரால்ட் (1899)
இந்திரகுல போதிரி (1924)
தமிழன் (கோலார்) (1926)
சாம்பவகுலமித்திரன் (1930)
ஆதிதிராவிட மித்திரன் (1939)
புத்துயிர் (1940)
இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.
ஆனால் இன்று #திராவிடர்_கழகம், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்ததுபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?
தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இருட்டடிப்பு செய்யும் திராவிடர் கழகத்தினர்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு #பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் கூறமாட்டார்கள் ஏன் தெரியுமா?
அவர் அப்படி ஒரு போராட்டமும் செய்ததில்லை என்பதே உண்மை.
பெரியார் வேசிகளின் வீட்டில் சல்லாபம் செய்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர்கள் மேலே கூறப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்கள்தான் என்பதே உண்மையான வரலாறு..
தமிழகத்தின் சாபக்கேடாக விளங்கும்
திராவிட இயக்கத்தை ஆரம்பித்து, தமிழகத்தை வீழ்த்தியதே இவரது ஒரே சாதனை!
(பிள்ளை என்றால் ஆற்று கரையோரத்தில் உழவு செய்து வாழ்ந்த பள்ளர்கள் என்று அர்த்தம்,விஜய பேரரசு வந்த பிறகு இந்த பட்டத்தை இவர்களிடம் இருந்து பிடுங்கி வேறு சில மக்களுக்கு அளித்ததாக வரலாறு பதிவு உண்டு)
#நண்பர்:Aav Arul Rajesh